Gpd shiva


God shiva சிவ பெருமானுக்கு பிடித்த எட்டு வகையான மலர்கள். 

ஏதோ எட்டு மலர்கள் என்றால் அரளி ,மல்லி, ரோஜா, சம்பங்கி போன்ற மலர்கள் என நினைக்க

வேண்டாம். கீழே படியுங்கள்:

'எட்டு நாண்மலர் கொண்டு அவன் சேவடி

மட்டலர் இடுவார் வினை மாயும்'

என்கிறார் அப்பரடிகள். 

இந்த எட்டு மலர்களை இட்டு வணங்க 'வினைகள் அழியும்'

என்கிறார் திருநாவுக்கரசர். சிவனை வணங்கும் பூசை இரு வகைப்படும். ஒன்று: அகப்பூசை இரண்டு: புறப்பூசை.

மேற்படி திருநாவுக்கரசர் கூறிய எட்டு மலர்களை மனதில் கொண்டு இறைவனை  எழுந்தருளச் செய்து ஆற்றும் பூசை அகப்பூசை என்று சொல்லப்படும். அந்த எட்டு மலர்களை கொள்ளாமல் ஈசனுக்கு செய்யும் பூசை புறப்பூசை எனப்படும். ஆமாம் அது என்ன எட்டு மலர்கள். 

அந்த  எட்டு மலர்கள் என்பது மனம் என்ற செடியில் வளர வேண்டிய மலர்களாகும்.அது 

கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 கொல்லாமை

2 ஐம்பொறிகளை அடக்குதல்

3 அமைதி 

4 அருளுடைமை

5ஞானம்

6 தவம் 

7 வாய்மை

8 பாவனை( நல்ல நடத்தை)

ஆகியவைதான் எட்டு மலர்கள்.

இந்த அரிய பண்புகளை மனதில் இருத்திக் கொண்டாலே மனம் தூய்மை யாகும். இம் மாதிரி தூய்மையான மனதுடன்

எல்லாம் வல்ல ஈசனை வணங்கினாலே போதும் அவன்  உங்களை ஆட்கொண்டு விடுவான்.

இதைத் தான் மணிவாசகர் தனது சிவ புராணத்தில் 

"போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே..............

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று 

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்" என்கிறார். அதாவது 

ஈசன் உயிர்களைத் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் பக்தி செலுத்தியும், பக்குவம் வந்தபின் தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆட்கொள்பவ னாகலின் "போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் ந நின் தொழும்பின்"  என்கிறார் மிக அழகாக. 

பூவில் மணம் போல ஆன்மாவில் ஈசன் கலந்து ள்ளான். மலர் அரும்பாயிருக் கும்போது மணமிருக்காது.

அலர்ந்த பின்னரே அதாவது ஆன்மா பக்குவப்பட்ட பின்னரே சிவ மணம் கமழும் என்கிறார். 

இதைத்தான் நமது திருமூலர்

"பூவினிற் கந்தம் பொருந்திய

வாறுபோற் சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது " என்கிறார்.

ஆகவே அன்பர்களே இறைவன் ஈசனுக்கு நீங்க கஷ்டப்பட்டு செலவு செய்து மல்லிகை சாமந்தி ரோசா போன்ற புற மலர்களைக் கொண்டு புறப்பூசை செய்யாமல்  அப்பரடிகளும் திருநாவுக்கரசரும்  கூறியபடி அக மலர்களான எட்டு மலர் களை கொண்டு சிவனுக்கு  அகப்பூசை செய்து அவன் தாள் வணங்கிஎல்லாம்வல்ல அய்யன் ஈசனின் அருளினைப் பெறுவீராக. 

ஓம்நமச்சிவாய! சிவாயநம! திருச்சிற்றம்பலம்!

Comments

Popular posts from this blog

திருவண்ணாமலை தீபத்திருவிழா..என்னென்ன ஏற்பாடுகள்.. அதிகாரிகளுடன் இறையன்பு ஆலோசனை

Love Shiva